புதன், 25 ஆகஸ்ட், 2010

மேதை


ராமராஜன் படம் என்றால் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
அப்படி எதிர்பார்த்து பாடல்களை கேட்பவர்களுக்கு மிஞ்சுவது பெரும் ஏமாற்றம் தான். இசையமைப்பாளர் தீனா தூக்க கலக்கத்தில் இசையமைத்தது போலவே பாடல்கள் ஒலிக்கின்றன. அவற்றுள் கார்த்திக்குடன்(கார்த்திக் தானா அது?) நம்ம சித்ராவின் அதே இனிமையான குரலில் உங்க கிட்ட என்கிற பாடல் நன்றாக இருக்கிறது.

இரண்டாவதாக மற்றொரு பாடல்: பென்னி தயாள், சைந்தவி ஆகியயோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் உயிரிலே தீபம் ஒன்று .

சனி, 14 ஆகஸ்ட், 2010

என் இதயத்தில் இடம் பிடித்தாள் கனிமொழி!


பெயரைக் கேட்டதுமே நெஞ்சம் தவித்தது; பாடல்கள் எப்படி இருக்குமென.
சிறிது ஏமாற்றம் தான். ஆனாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் விடாமல்  மனசுக்குள் ரீங்கரிக்கிறது.
அது இது: முழு மதி - vijai EsuthaaS  விஜய் யேசுதாஸ், பேலா செண்டே குரலினிமையில் சதீஷ் சக்கரவர்த்தி கலக்கியிருக்கிறார். நா. முத்துக்குமார் வரிகள் ஜொலிக்கின்றன.
இந்தப் பாடலின் ஒலிக்கோவையும் அருமையாய் இருக்கிறது.
கேட்டு மகிழ.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி...?

அது என்ன பெயர்; பாணா - காத்தாடி?
ஒன்றும் புரியாவிட்டாலும்  யுவனின் இசையில் சில பாடல்கள் கேட்க இனிமை தருகின்றன.
1. தாக்குதே கண் தாக்குதே
2. என் நெஞ்சில்
3. குப்பத்து ராஜாக்கள்
4. பைத்தியம் பிடிக்குது
5. உள்ளால பூந்து பாரு
பாடலாசிரியர்கள்: வாலி, சினேகன், கங்கை அமரன் மற்றும் நா.முத்துக்குமார்.

குறிப்பு: இசையமைப்பில் யுவனின் அப்பா நெடி அடிக்கிறது. 
கேட்டு மகிழ: இங்கே ஒற்றுக