ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வ - குவார்டர் கட்டிங்


வ என்பது குவார்டர் கட்டிங் அடிச்சதினால் வரும் விக்கல் என்று நினைக்கிறேன்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் அவரது குழுவும் கொஞ்சம் குவார்டர் கட்டிங்கில் நனைந்தபிறகு எல்லாப் பாடல்களையும் ஒரே நேரத்தில் இசையமைத்திருப்பார்கள் போலும். ஜாலியாய் எல்லாப் பாடல்களுமே அழகாய் வந்திருக்கின்றன. அதிலும் தேடியே.. என்கிற பாடல் இளையராஜாவின் பழைய ஒரு இசை வடிவத்தை நினைவு படுத்தினாலும் நம்மை ஆடவைக்கிறது. குமரிகளுக்கு மிகவும் பிடித்துப் போகக்கூடிய பாடல் இது.  இந்தப் படத்தின் என் பாடல் தேர்வுகள் இதோ.



௧. தேடியே.. தேடியே.. - ஆண்ட்ரியா ஜெரிமியா
௨. சவூதி பாஷா.. - ஜி.வி. பிரகாஷ் குமார், பார்கவி
௩. உன்னை கண் தேடுதே - ஜி.வி. பிரகாஷ் குமார், கானா உலக நாதன்
௪. உன்னை கண் தேடுதே மறு கலவை - DJ விஜய் சாவ்ல
௫. சார்ப்பு சார்ப்பு ஜி - ஜி.வி. பிரகாஷ் குமார், லட்சுமிகாந்த்

எல்லாப் பாடல்களையும் குமாரராஜா என்கிற புதியவர் எழுதியிருக்கிறார்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஏமாற்றும் எந்திரன்


அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதனாலோ என்னவோ ஏ.ஆர். ரகுமான் கலக்கியிருப்பார் என்று நினைத்தால் அது தவறென்று உணர நேரிட்டது. நியூ படத்தில் இருந்த தொழில் நுட்ப இசைக்கலவை எவ்வளவோ தேவலாம். எந்திரன் தந்த பாடல்களில் பிடித்தவை இவை.
1 . காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ் & ஷ்ரேயா கோஷல் - வைரமுத்து
2 . இரும்பிலே ஒரு - ஏ.ஆர்.ரகுமான் & காஷ் 'அன்' கிரிஸ்சி -  மதன் கார்க்கி
3 . புதிய மனிதா... - எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான் & கதீஜா ரகுமான் - வைரமுத்து