ஞாயிறு, 21 நவம்பர், 2010

நீயும் நானும்


பாடல்களை நான் கேட்க நேர்ந்தபோது இணையத்தில் முழுநீளப் படமே இறக்குமதி செய்யக் கிடைத்தது. பாடல்கள் சுமார் ரகம்தான்.
அவற்றுள் எனக்குப் பிடித்தவை இதோ.
1. அழகனே - பாடியவர்: சின்மயி 
2. ஆடு ஆடு -
3. சான்ஸ் -
 இசையமைத்திருப்பவர் சிறீராம் விஜய். பாடல்களை இயற்றியவர் பிறை சூடன்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வ - குவார்டர் கட்டிங்


வ என்பது குவார்டர் கட்டிங் அடிச்சதினால் வரும் விக்கல் என்று நினைக்கிறேன்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் அவரது குழுவும் கொஞ்சம் குவார்டர் கட்டிங்கில் நனைந்தபிறகு எல்லாப் பாடல்களையும் ஒரே நேரத்தில் இசையமைத்திருப்பார்கள் போலும். ஜாலியாய் எல்லாப் பாடல்களுமே அழகாய் வந்திருக்கின்றன. அதிலும் தேடியே.. என்கிற பாடல் இளையராஜாவின் பழைய ஒரு இசை வடிவத்தை நினைவு படுத்தினாலும் நம்மை ஆடவைக்கிறது. குமரிகளுக்கு மிகவும் பிடித்துப் போகக்கூடிய பாடல் இது.  இந்தப் படத்தின் என் பாடல் தேர்வுகள் இதோ.



௧. தேடியே.. தேடியே.. - ஆண்ட்ரியா ஜெரிமியா
௨. சவூதி பாஷா.. - ஜி.வி. பிரகாஷ் குமார், பார்கவி
௩. உன்னை கண் தேடுதே - ஜி.வி. பிரகாஷ் குமார், கானா உலக நாதன்
௪. உன்னை கண் தேடுதே மறு கலவை - DJ விஜய் சாவ்ல
௫. சார்ப்பு சார்ப்பு ஜி - ஜி.வி. பிரகாஷ் குமார், லட்சுமிகாந்த்

எல்லாப் பாடல்களையும் குமாரராஜா என்கிற புதியவர் எழுதியிருக்கிறார்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

ஏமாற்றும் எந்திரன்


அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதனாலோ என்னவோ ஏ.ஆர். ரகுமான் கலக்கியிருப்பார் என்று நினைத்தால் அது தவறென்று உணர நேரிட்டது. நியூ படத்தில் இருந்த தொழில் நுட்ப இசைக்கலவை எவ்வளவோ தேவலாம். எந்திரன் தந்த பாடல்களில் பிடித்தவை இவை.
1 . காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ் & ஷ்ரேயா கோஷல் - வைரமுத்து
2 . இரும்பிலே ஒரு - ஏ.ஆர்.ரகுமான் & காஷ் 'அன்' கிரிஸ்சி -  மதன் கார்க்கி
3 . புதிய மனிதா... - எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரகுமான் & கதீஜா ரகுமான் - வைரமுத்து

புதன், 25 ஆகஸ்ட், 2010

மேதை


ராமராஜன் படம் என்றால் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.
அப்படி எதிர்பார்த்து பாடல்களை கேட்பவர்களுக்கு மிஞ்சுவது பெரும் ஏமாற்றம் தான். இசையமைப்பாளர் தீனா தூக்க கலக்கத்தில் இசையமைத்தது போலவே பாடல்கள் ஒலிக்கின்றன. அவற்றுள் கார்த்திக்குடன்(கார்த்திக் தானா அது?) நம்ம சித்ராவின் அதே இனிமையான குரலில் உங்க கிட்ட என்கிற பாடல் நன்றாக இருக்கிறது.

இரண்டாவதாக மற்றொரு பாடல்: பென்னி தயாள், சைந்தவி ஆகியயோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் உயிரிலே தீபம் ஒன்று .

சனி, 14 ஆகஸ்ட், 2010

என் இதயத்தில் இடம் பிடித்தாள் கனிமொழி!


பெயரைக் கேட்டதுமே நெஞ்சம் தவித்தது; பாடல்கள் எப்படி இருக்குமென.
சிறிது ஏமாற்றம் தான். ஆனாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் விடாமல்  மனசுக்குள் ரீங்கரிக்கிறது.
அது இது: முழு மதி - vijai EsuthaaS  விஜய் யேசுதாஸ், பேலா செண்டே குரலினிமையில் சதீஷ் சக்கரவர்த்தி கலக்கியிருக்கிறார். நா. முத்துக்குமார் வரிகள் ஜொலிக்கின்றன.
இந்தப் பாடலின் ஒலிக்கோவையும் அருமையாய் இருக்கிறது.
கேட்டு மகிழ.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

பாணா காத்தாடி...?

அது என்ன பெயர்; பாணா - காத்தாடி?
ஒன்றும் புரியாவிட்டாலும்  யுவனின் இசையில் சில பாடல்கள் கேட்க இனிமை தருகின்றன.
1. தாக்குதே கண் தாக்குதே
2. என் நெஞ்சில்
3. குப்பத்து ராஜாக்கள்
4. பைத்தியம் பிடிக்குது
5. உள்ளால பூந்து பாரு
பாடலாசிரியர்கள்: வாலி, சினேகன், கங்கை அமரன் மற்றும் நா.முத்துக்குமார்.

குறிப்பு: இசையமைப்பில் யுவனின் அப்பா நெடி அடிக்கிறது. 
கேட்டு மகிழ: இங்கே ஒற்றுக 

திங்கள், 5 ஜூலை, 2010

ஐவர் கலக்குகிறார்கள்

இன்னும் திரைக்கு வராத ஐவர் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
எல்லாப் பாடல்களுமே அதன் வித்தியாசமான இசைக் கொப்பினால் உள்ளம் கவர்வதாக உள்ளன.
இசையமைப்பு: கவி பெரிய தம்பி.
பாடல்கள்: பழனி பாரதி,கவி பெரிய தம்பி, நா முத்துக்குமார்.
கேட்டுப்பாருங்களேன்..

௧. மல்லிகா.. மல்லிகா.. பாடியவர் திப்பு.
௨. அம்மணி அம்மன் பாடியவர் மது பாலகிருஷ்ணன்
௩. எங்க வீடு நாயி பாடியவர் பென்னி தயாள்.
௪. கொத்தவரங்கா.. பாடியவர் பேபி ஹரிணி
௫. அஜா குஜா பாடியவர் முகேஷ்
௬. வானம் விடிந்தது பாடியவர் கார்த்திக்.